இந்த வார்த்தை கேட்ட உடன் உங்களுக்கு கோபம் வரும் ..... ஏனென்றால்
இந்த உலகில் சிறந்த இனம் மனிதனாம் ...... நான் என்ற அகங்காரம் பிறப்பிடம்
இந்த சிந்தனை தான் சுயநலத்தின் ஆரம்பம் இந்த சிந்தனை தான் .
தான் சிறந்த இனம் சொல்வதற்கு முக்கியமான காரணி மனிதனுக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது...அவனுக்கு மட்டுமே உரிமை ..அவனின் அடிமை மற்ற ஜீவராசி ...
மனிதன் எவ்வளவு மோசமனவன் தெரியுமா? உணவு தவிர்த்து மற்ற காரணங்களூக்காக தன் இனத்தை அழிக்கும் மூட்டாள்.....
...
முதலில் நாம் மனித இனம் தான் சிறந்தது பிறகு சுருங்கி என்னுடைய மொழி ,நாடு ,மதம், மற்றும் பல.....
நம்முடைய சுயநலத்தின் ஆரம்பம் இந்த சிந்தனை என்பதை உணர வேண்டும்....
நம்முடைய சிந்தனையின் அடிப்படை தவறை உணர்ந்து இந்த இயற்கையை செயற்கை ஆக்கமால் இருந்தாலே இந்த பிரபஞ்சத்திற்கு செய்யும் பேருதவியாக இருக்கும்......